காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கைவிடப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் இன்று (12) பிற்பகல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டன.
அத்துடன், அங்கிருந்த மக்களும் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.