Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'ஹரக் கட்டா' கைது

‘ஹரக் கட்டா’ கைது

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேக நபரும், பாதாள உலக குழுவின் தலைவருமான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து டுபாயில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹரக் கட்டா தனது மனைவி என்று கூறப்படும் பெண்ணுடன் மலேசியா செல்ல முயன்ற போதே இவ்வாறு கைதாகியுள்ளார்.

இவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவரpன் புகைப்படத்தைப் பயன்படுத்தி, இறந்த மற்றொரு நபரின் பயோ-டேட்டாவில் உள்ளடக்கி போலி கடவுச்சீட்டொன்றை தயார் செய்து அவர் இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles