Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் - இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு

நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் – இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளை கொண்டு சென்ற போது தீப்பற்றலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இரண்டு வருடங்களின் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நட்டயீட்டை வழங்க காப்புறுதி நிறுவனத்தினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதன்காரணமாகவே வழக்கு தொடரவுள்ளதாக என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மசகு எண்ணெய் ஏற்றி வந்த போது இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் குறித்த கப்பல் தீப்பற்றலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles