டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்று இந்தியாவினால் இலங்கை படைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாளைய தினம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீன உளவு கப்பலான யுவாங் வாங் 5க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த டோர்னியர் உளவு விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளது.
பெரும்பாலும் இந்த விமானம் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.