Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன கப்பல் விவகார பின்னணியில் இருப்பது பசில் - டியூ குணசேகர

சீன கப்பல் விவகார பின்னணியில் இருப்பது பசில் – டியூ குணசேகர

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழு இருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இரு நாடுகளும் இணைந்து தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், வேறு தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை எனவும்இ அணிசேரா கொள்கையின்படி இலங்கை செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு சீன கப்பல் தொடர்பில் சீனாவின் நன்மதிப்பைப் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை மேலும் நீடிப்பதற்காக அமெரிக்காஇ இந்தியா என கிசுகிசுக்கின்றவர்கள் இந்நாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் செயற்பாடுகளை மிகவும் வெறுப்புடன் கண்டிப்பதாகவும்இ இவ்வாறான இராஜதந்திர பிரச்சினைகளில் லக்ஷ்மன் கதிர்காமர் செயற்பட்டது போன்று தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles