Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதுநலவாய போட்டிக்குச் சென்று காணாமல் போன இரு இலங்கை வீரர்கள் கண்டுபிடிப்பு

பொதுநலவாய போட்டிக்குச் சென்று காணாமல் போன இரு இலங்கை வீரர்கள் கண்டுபிடிப்பு

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 161 பேர் கொண்ட இலங்கையின் மற்றுமொரு தடகள வீரர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன இந்த மல்யுத்த வீரரை இங்கிலாந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த திங்களன்று, பொதுநலவாய விளையாட்டு கிராமத்தில் இருந்து ஒரு ஜூடோ வீராங்கனையும் இலங்கை ஜூடோ அணியின் மேலாளரும் காணாமல் போயினர்.

இந்தநிலையில் மல்யுத்த வீரர் வியாழன் அன்று தடகள கிராமத்தை விட்டு வெளியேறியதாக இலங்கையின் ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

மற்ற இருவரான ஜூடோகா மற்றும் ஜூடோ அதிகாரி முன்னறிவிப்பின்றி கிராமத்தை விட்டு வெளியேறிய பின்னர் இங்கிலாந்து காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த மூவருக்கும் ஆறு மாதங்களுக்குச் செல்ல செல்லுபடியாகும் விசாக்கள் உள்ளன. எனவே அவர்கள் காணாமல் போனதற்கான காரணங்கள்  குறித்து எந்தவொரு உறுதியான முடிவுக்கும் வருவது கடினம் என்று பொதுநலவாய விளையாட்டுகளுக்கான இலங்கை அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போதல் சம்வங்களை அடுத்து இலங்கை விளையாட்டு வீரர்கள் தற்போது கடவுச்சீட்டு மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை பாதுகாப்புக்காக அந்தந்த விளையாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles