இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவது அவசியமானது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களுக்கு மின்சாரம், உணவு மற்றும் மருந்து, எரிபொருள் போன்ற சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு அரசிடம் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (05) நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான மேலதிக யோசனைகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை நாளை மறுதினம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறும்.