Saturday, August 2, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலங்கா உர நிறுவனத்துக்கு 5 கோடி ரூபா நஷ்டம்

லங்கா உர நிறுவனத்துக்கு 5 கோடி ரூபா நஷ்டம்

லங்கா உர நிறுவனம் உரிய முகாமைத்துவம் இன்றி மானிய உர கையிருப்பை விநியோகித்தமையினால் அரசாங்கத்திற்கு 5 கோடியே 38 இலட்சத்து 14 ஆயிரத்து 600 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டுக்கான லங்கா உர நிறுவனம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் சுமார் 4 கோடியே 28 இலட்சத்து எட்டாயிரத்து இருநூறு ரூபா பெறுமதியான 671.47 மெற்றிக் டன் உரம் மற்றும் ஒரு கோடியே 35 இலட்சத்து 20 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான 225.44 மெற்றிக் டன் மானிய உரம் போன்றவற்றாலல் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles