Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உலகம்யுக்ரைனில் மேலுமொரு இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

யுக்ரைனில் மேலுமொரு இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

யுக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.

சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் நகர மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணை தாக்குதலில் கேரள மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யுக்ரைனில் இருந்து மேலும் 1,700 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கீவ் தலைநகரில் உள்ள இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles