இலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை 20 வீதத்தினால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மின் பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன
ஆனால், தற்போதைய காலப்பகுதியில் நாளொன்றுக்கு 38 மில்லியனாக குறைந்துள்ளது.
பல மாதங்களாக நிலவும் மின்வெட்டு மற்றும் நுகர்வோரின் குறைந்தளவான மின்பாவனையே இதற்கு காரணம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.