Sunday, April 20, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்புட்டினை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்ரைன் ஜனாதிபதி

புட்டினை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்ரைன் ஜனாதிபதி

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி ரஷ்ய ஜனாதிபதியை நேருக்கு நேர் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இது மட்டுமே ஒரே தீர்வு என யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யுக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும், ரஷ்ய படையினரை தனது நாட்டில் இருந்து வெளியேற்றுமாறும் ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​பொதுமக்களுக்கான பாதுகாப்பு மனிதாபிமான வழித்தடத்தை அமைப்பதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles