தீவு தேசமான இலங்கையில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையின் துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டைக்கு சீன இராணுவக் கப்பலை அனுப்புகிறது.
இந்த நடவடிக்கையானது இலங்கையின் இந்து சமுத்திரக் கரையோரப் பகுதியில் பலமான இராணுவ நிலைப்பாட்டை ஏற்படுத்த சீனா முயற்சிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக வொஸ்ப் ஒப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் யுவான் வாங் 5 என்ற கப்பலை, இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஒரு ஆய்வுக் கப்பல் என்று சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் விபரிக்கிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வர்த்தக ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பயன்படுத்துவதே சீனாவின் இலக்கு என்று முன்னாள் இலங்கை இராஜதந்திரி தயான் ஜயதிலக வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை துறைமுகத்தில் கப்பலை நிறுத்துவதற்கு தனது ஒப்புதலை வழங்கியதாக நம்பப்படுகிறது.
இந்தநிலையில் பெரிய எதிர்ப்பு இயக்கத்திற்குப் பின்னர், அவருக்குப் பதிலாக வந்த புதிய அரசாங்கம் அந்த முடிவைத் திரும்பப் பெறவும், துறைமுகத்தை சீனக் கப்பல் பயன்படுத்துவதை நிறுத்தவும் வாய்ப்பில்லை.
இலங்கைக்கு நிதி உதவி தேவை. 4 பில்லியன் டொலர்களை சீனாவிடம் இருந்து எதிர்பார்க்கிறது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை பெற வேண்டுமானால், சீனாவிடம் இருந்த பெற்ற கடன்களை செலுத்தும் கால அட்டவணையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
எனவே கப்பல் அனுமதியை ரத்து செய்வதன் மூலம் சீனாவின் அதிருப்தியை அது விரும்பவில்லை என்று இலங்கை தேசிய சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் தெரிவித்தார்.