Tuesday, May 6, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணிலின் இல்லத்திற்கு தீவைத்த சம்வபம்:சந்தேகநபர்கள் மூவர் கைது

ரணிலின் இல்லத்திற்கு தீவைத்த சம்வபம்:சந்தேகநபர்கள் மூவர் கைது

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் நேற்றிரவு பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வைத்து இவர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மடபாத்த மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் போது இந்த தீ வைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், அவரது தனிப்பட்ட நூலகமும் எரிந்து நாசமாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles