Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுராதன இடங்கள் பட்டியலில் ஜனாதிபதி மாளிகை இல்லையாம்

புராதன இடங்கள் பட்டியலில் ஜனாதிபதி மாளிகை இல்லையாம்

போராளிகளால் கையகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை உட்பட கொழும்பில் உள்ள நான்கு பிரதான கட்டிடங்களும் புராதன இடங்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், பழங்கால சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் தொடர்பில் தொல்பொருள் சட்டத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஜனாதிபதி மாளிகை புராதனமான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பான முழுமையான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதன் காரணமாக ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன புராதன இடங்களாக வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள தொல்பொருட்கள் குறித்த பதிவேடு தொல்பொருள் திணைக்களத்திடம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles