Sunday, April 20, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராகம மருத்துவ பீட மாணவர்களின் மோதல்: விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ராகம மருத்துவ பீட மாணவர்களின் மோதல்: விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ராகம மருத்துவ பீடத்தில் இரண்டு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதலாம் திகதி இரவு ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இந்தக் குழுவானது சம்பவம் தொடர்பான அறிக்கைகளை அவதானித்து, விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாரித்துள்ளது.

குறித்த மோதல் சம்பவம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் பொறுப்பற்ற செயலாக உள்ளதோடு, திட்டமிட்டோ அல்லது வேண்டுமென்றோ நடத்தப்பட்ட விடயமல்ல என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சில செயல்களை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அறிக்கையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருந்திக பெர்னாண்டோவின் மகனையும், அவரது நண்பர்களையும் உடனடியாக கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ எந்தவிதமான தலையீட்டையும் செய்யவில்லை என்று குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டத்தை பாரபட்சமின்றி அமுல்படுத்தவும் அவர் வழிவகை செய்துள்ளார்.

அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என முடிவுசெய்வதாகவும், விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles