Sunday, May 18, 2025
27.7 C
Colombo
செய்திகள்உலகம்முகமது நஷீத்தின் சகோதரர் கைது

முகமது நஷீத்தின் சகோதரர் கைது

மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீத்தின் சகோதரர் அகமது நஜிம் அப்துல் சத்தார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி தனது சகோதரரைக் கைது செய்துள்ளதாக முகமது நஷீத் குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றவியல் நடைமுறைகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆளும் கூட்டணியில் உள்ள கடும்போக்கு வாதிகளை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இந்த சம்பத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதி செய்துள்ளதாக மாலைதீவில் உள்ள சன் செய்தி வெளியிட்டுள்ளது.

45 வயது, 35வயது மற்றும் 46 வயதுடைய மாலைதீவு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles