Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி மாளிகையில் இஸ்திரிப் பெட்டியை திருடிய நபருக்கு விளக்கமறியல்

ஜனாதிபதி மாளிகையில் இஸ்திரிப் பெட்டியை திருடிய நபருக்கு விளக்கமறியல்

கடந்த 9ஆம் திகதி கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இஸ்திரிப் பெட்டியை திருடிய குற்றச்சாட்டில் கைதான நபர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் கடந்த 9ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து இஸ்திரிப் பெட்டி ஒன்றை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அலரி மாளிகையில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles