தேசிய எரிபொருள் அட்டை (QR குறியீடு) தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி முதல் இதுவரையில் 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமை சோதிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) 464 நிலையங்களில் 122,469 பரிமாற்றங்கள் QR குறியீடு மூலம் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 4.4 மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் அட்டையை பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
