Sunday, June 21, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடு புகுந்து ஒருவர் சுட்டுக்கொலை

வீடு புகுந்து ஒருவர் சுட்டுக்கொலை

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை – சில்வா மாவத்தை பகுதியில், நேற்று(27) இரவு வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டினுள் நுழைந்த இருவர் அங்கிருந்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்மலானை – சில்வா மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கு டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles