கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்ட தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்மொழிந்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள விகாரமஹா தேவி பூங்காவிற்கு எதிர்ப்புத் தளத்தை மாற்ற முடியும் என்றார்.
நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போராட்டம் பொருத்தமான இடம் அல்ல என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலானது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவரும் இடமாக இருப்பதால், காலி முகத்திடல் போராட்டத் தளத்தை உடனடியாக அகற்ற வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.