Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிசுவை கொன்ற வைத்தியர் - 5 வருடங்களின் பின்னர் சிக்கினார்

சிசுவை கொன்ற வைத்தியர் – 5 வருடங்களின் பின்னர் சிக்கினார்

பிரசவத்திற்குப் பின்னர் சிசுவைக்கு கொன்று, சடலத்தை கிணற்றில் வீசிய வழக்கில் மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, உடுமஹல வீதியில் உள்ள கிணற்றில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான குறித்த வைத்தியர், கண்டி வைத்தியசாலையில் பணியாற்றிவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தனது மனைவியுடன் மட்டக்களப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அந்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுக்கு வீட்டில் பிறந்த குழந்தையை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி கொலை செய்ய உதவியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்வபம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles