விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.