QR முறைமைக்கமைய எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இன்று முதல் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த முறைமையின் கீழ் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை வாகன இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்திற்கமைய எரிபொருளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்கள் சீர்செய்யப்படும் வரை இறுதி இலக்க முறைமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
60 சதவீத இடங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான முறைமை பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் விநியோகத்தின்போது QR வசதிகளுடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.