Sunday, May 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு கோரும் மஹிந்த

உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு கோரும் மஹிந்த

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி புதிய தேர்தலுக்கு வழிவகை செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான செலவை ஏற்க நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எந்தவொரு கொடுப்பனவும் பெறாமல் தேர்தல் கடமைகளில் ஈடுபடத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளதால், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles