எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (25) மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவை பாரியளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும், மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 3000 தனியார் பேருந்துகள் நாளாந்த பயணத்தை ரத்து செய்ய நேரிட்டதாக மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட சுமார் 3200 மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்துகள் உள்ளதாகவும், ஆனால் இன்று (25) சுமார் 300 பேருந்துகள் மட்டுமே இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போக்குவரத்து சபையினால் டீசல் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அந்த வேலைத்திட்டம் வெற்றியடையாது எனவும் இந்த வாரத்திற்குள் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களுக்கு டீசல் வழங்கும் முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தாவிடின் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து நீக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.