Wednesday, September 24, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் ஒரு கோடி ரூபா நட்டம்

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் ஒரு கோடி ரூபா நட்டம்

ரயில் நிலைய அதிபர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பிற்பகல் வரை, ரயில் பயணச்சீட்டு வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகியிருந்த போதிலும்இ ரயில் சேவைகள் முன்னெடுக்ககப்பட்டன.

அந்தத் திணைக்களத்திடம் வினவியபோது, ​​ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும்இ சில நிலையங்களில் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பின் போது ரயில்வே திணைக்களத்திற்கு நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு தமது தொழிற்சங்கம் பொறுப்பேற்காது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles