Monday, May 5, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவ சிப்பாயிடமிருந்து கொள்ளையிடப்பட்ட ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

இராணுவ சிப்பாயிடமிருந்து கொள்ளையிடப்பட்ட ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போதான மோதலில், கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து ரீ-56 ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கியொன்று இனந்தெரியாதோரால் கொள்ளையிடப்பட்டது.

இவ்வாறு, காணாமல்போயிருந்த துப்பாக்கி, ராஜகிரிய சமனல பாலத்தின் கீழ் (நாடாளுமன்றம் திசையாக) தியவன்னா ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி கடற்படை சுழியோடிகள், குறித்த துப்பாக்கியுடன் வெற்று தோட்டாப் பையொன்றையும் மீட்டு, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles