Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையிலும் குரங்கு அம்மை பரவும் அபாயம்

இலங்கையிலும் குரங்கு அம்மை பரவும் அபாயம்

இலங்கையிலும் குரங்கு அம்மை பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் அறிகுறிகள் நன்கு வெளிப்படுவதால் நோயாளர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனாவுடன் ஒப்பிடும்போது தொற்று விகிதம் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவாச அமைப்பு, சளி அல்லது தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் வைரஸ் பரவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது விலங்குகள் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரவக்கூடும்.

நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்கள் ஒரே தட்டு, கோப்பை அல்லது பிற தனிப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles