இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவியேற்க நாடாளுமன்றத்துக்கு இன்றுகாலை வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.
இதனையடுத்து, காலை 10.10 அளவில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.