2022 ஜனவரி-ஏப்ரல் காலத்தில் இந்தியா 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் சீனா 67.9 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளன.
முதல் நான்கு மாதங்களில் 359.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கியதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு கடன் வழங்குநர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் வரையிலான இந்தியக் கடன்களின் முழு தொகுப்பு 3.5 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
இதற்கு மத்தியில் சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர்கள் கடன் தொடர்பில் இலங்கை நம்பிக்கையுடன் இருக்கிறது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இலங்கையில் கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், மார்ச் மாதத்தில் முற்றிலுமாக சரிவை எட்டியபோதும், சீனாவை முந்திக் கொண்டு இந்தியாஇ இலங்கைக்கு கடனை வழங்கியது.
ஏப்ரல் 30 வரையிலான நான்கு மாதங்களில் நிதி வழங்கல் குறித்த தரவுகளின் அடிப்படையில் சீனாவால் நீடிக்கப்பட்ட 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 376.9 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன்களை நீடித்து இந்தியா முதலிடம் பிடித்தது.