இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மட்டுமே தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் விநியோகிக்க எரிபொருள் இல்லை.
தற்போது LIOC நிலையங்களிலும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று ஒரேநாளில் மட்டும் 2 மில்லியன் லீற்றர் பெற்றோலை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, LIOCயின் முகாமைப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள அதன் எண்ணெய் களஞ்சியத்தில் இருந்து, 125 பௌசர்களில் பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றது.