எரிபொருள் விநியோகம் தொடர்பாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள அறிவிப்பின் முக்கிய சில விடயங்கள்.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முன்னால் உள்ள வரிசைகள் அகற்றப்படவேண்டும்.
அதன் பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.
தேசிய எரிபொருள் அட்டை மற்றும் வாகன இலக்கத்தின் இறுதி இலக்க அடிப்படையிலான விநியோகம் என்பன கட்டாயமாகும்.
இது நடைமுறைக்கு வரும் திகதி விரைவில் அறிவிக்கப்படும்.
வாராந்தம் இரண்டு நாட்கள் ஒரு வாகனத்திற்கு கண்டிப்பாக எரிபொருள் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படும்.