கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சர்வதேச பிடியாணை பெற வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சேர் எட் டேவி, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விடுத்துள்ள அறிக்கையில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்காக கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என சேர் எட் டேவி தெரிவித்துள்ளார்.