Saturday, December 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டுக்கட்சி எம்.பிக்கள் மூவரின் கட்சி உரிமை நீக்கம்

மொட்டுக்கட்சி எம்.பிக்கள் மூவரின் கட்சி உரிமை நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சியின் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான கடிதம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

அதுமட்டுமின்றி, கட்சியின் பொருளாளராக கடமையாற்றிய இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சியின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேனவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles