செய்திகள்உள்நாட்டுமிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஹெரோயினுடன் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகுலுகஹா மற்றும் கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 30, 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மிதிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என பொலிஸாரால் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles