அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கலால் ஆணையாளர் எம். ஜே. குணசிறி தெரிவித்தார்.
அந்த இரண்டு நாட்களில் இந்த சட்டத்தை மீறுபவர்களை தேடி விசேட கண்காணிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.