Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை விட்டு பறந்தார் பசில்

நாட்டை விட்டு பறந்தார் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு இன்று காலை புறப்பட்டுள்ளார்.

இதனை விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ டுபாய்க்கு சென்றுள்ளார்.

இந்த விமான பயணத்திற்காக அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள ‘கோல்ட் ரூட்’ முனையத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ஷ டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அமெரிக்கா செல்வதற்கு அவர் எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles