நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் கடந்த பெப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கினார்.
இதனையடுத்து, குறித்த கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் விஜய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.