ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இன்றைய தினம் மூடப்படும் சகல பாடசாலைகளும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.