தலவாக்கலை – மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.
விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவர் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் மடக்கும்புர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.
அத்துடன்இ இதன்போது மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.