ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவியின் தாயார், அவரது இரண்டு பிள்ளைகள், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மற்றுமொரு உறவினர் முறையான பெண் ஆகியோர் இன்று (20) காலை டுபாய் நோக்கி பயணித்துள்ளனர்.
அவர்கள் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘சில்க் ரூட்’ முனையத்தின் ஊடாக டுபாய் இராச்சியத்திற்குப் புறப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
இன்று காலை 10.05 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-651 இல் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து அவர்கள் டுபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்று காலை அமெரிக்கா சென்றமை குறிப்பிடத்தக்கது.