22 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு மற்றும் குருநகர் பகுதிகளில் நேற்று (18) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
17 கிலோ 28 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் குருநகரில் வசிக்கும் 27 முதல் 42 வயதுக்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.