வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாஇ ஓமந்தைஇ பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று(18) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.
ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தடியில் பயணித்த வேளை வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டிடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட்டக்கச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகம் யோகராசா ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.