புத்தளம் – அனுராதபுரம் மார்க்கத்தில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (19) காலை 6.20 மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 7 ஆம் இலக்கத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேனீர் அருந்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உப்பு ஏற்றிச் சென்ற லொறி மீது வேகமாக பயணித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளதுடன் பேருந்தின் மிதி பலகையில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்து மற்றும் லொறியின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.