ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக இன்று 19 முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையில் விசேட ரயிலை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.
இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில், குருணாகல் மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும் என அவர் தெரிவித்துள்ளார்.