தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்ன தூவ மற்றும் பத்தேகம அணுகு வீதிகளுக்கு இடையில் கொள்கலன் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88.3 கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் கொழும்பை நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.