இந்தியாவின் சென்னை – துரைப்பாக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீபா என்ற 32 வயதான திருமணமாகாத பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
அத்துடன், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.