Monday, December 1, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலுக்குச் சென்ற மீனவர் மாயம்

கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்

யாழ்ப்பாணத்தில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என ஊர்க்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர் காரைநகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மீனவர் கடந்த 17ஆம் திகதி மீன்பிடி தொழிலுக்காக வீட்டை விட்டுச் சென்றதாகவும், இது வரையில் அவர் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை எனவும் அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி பொலிஸார் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles