Friday, June 20, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகங்குவா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

கங்குவா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பொபி டியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

கங்குவா படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியதுடன், இந்த திரைப்படம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது.

எனினும் பின்னர் கங்குவா திரைப்படம் வெளியாகும் திகதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles