Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு விஷமடைந்ததால் 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

உணவு விஷமடைந்ததால் 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவை, பக்கமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு விஷமடைந்ததன் காரணமாக சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பேருந்துகள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் பக்கமூன பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பக்கமூன பிரதேச வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக அதிகளவானோர் பேருந்துகள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தனகடவல மற்றும் பக்கமூன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் பணிப்பெண்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles